Asianet News TamilAsianet News Tamil

ஈரோட்டில் பாலை சாலையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் கொள்முதல் விலை உயர்த்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. 

Producers protest by pouring milk on roads in Erode
Author
First Published Mar 17, 2023, 10:59 AM IST

கோவை - ஈரோடு சாலையை இணைக்கும் நசியனூர் சாலையில் பார் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், கால்நடை தீவனங்களை 50% மானிய விலையில் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ராமசாமி “நாள் ஒன்றுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆவினுக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுவதாகவும், இன்றிலிருந்து படிப்படியாக அது குறைக்கப்பட்டு ஆவினுக்கு முழுமையாக பால் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் கூறினார்.

திருச்சியில் கடை அமைப்பதில் மோதல்: முதியவர் வெட்டி படுகொலை

இதே போல் கதிரம்பட்டி, மூலக்கரை, தொட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டால் மூங்கில் தொழில் பாதிப்பு; கைவினை கலைஞர்கள் வேதனை

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ராயபாளையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளரும், ஈரோடு மாவட்ட தலைவருமான ராமசாமி தலைமை வகித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios