திருச்சியில் கடை அமைப்பதில் மோதல்: முதியவர் வெட்டி படுகொலை

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே விளக்கு கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

60 year old man killed in trichy

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம்  குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கதவு முன்பாக விளக்கு கடை அமைப்பதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோர் விளக்கு கடை வைத்துள்ளனர். இதில் கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் நேற்று மதியம் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக கீழ தேவதானம் மஞ்சுளா என்பவரின் மகன் அருண் பிரசாத் (வயது 33) என்பவருக்கும் சத்யராஜ் (32) என்பவரின் உறவினர் மணிமாறன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அருண் பிரசாத்தின் தந்தை ராஜேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக அருண் பிரசாத் தனது தந்தை ராஜேந்திரனை தாக்கியதற்கு பழிக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் மணிமாறனின் உறவினர் சத்யராஜின் தந்தை தனபால் (60) என்பவரை  அரிவாளுடன் வந்து தனபாலின் வீட்டில் புகுந்து அவரது மார்பினில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார். தற்பொழுது கொலை செய்த அருண்பிரசாத்தை கோட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சம்பவ இடத்தில் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர்  அன்பு மற்றும் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் செல்வி நிவேதா லட்சுமி ஆகியோர் விசாரணை செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios