வீதியில் பிறந்த நாள் கொண்டாட்டம்; மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அத்துமீறல் - 4 பேர் கைது
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் சிலர் அவ்வழியாக நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த சிறுமியின் கன்னத்தில் இளைஞர்கள் கேக்கை தடவியுள்ளனர்.
அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி
இது குறித்து சிறுமி கேட்டபோது நான்கு பேரும் சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். மேலும் அவர் மீது வேண்டுமென்றே மீண்டும் கேக்குகளை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி உறவினர்கள் உதவியுடன் உடனடியாக குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தன்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன் - ஆளுநர் தமிழிசை
விரைந்து வந்த காவல் துறையினர் சிறுமியிடம் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவ் (19), சந்தோஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் மற்றும் சஞ்சீவி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.