கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்; நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டத்தில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 persons get 20 year prison who stock ganja at home in coimbatore

கோவை மாவட்டம் சூலூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜெயபாண்டியம்மாள் மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு வீட்டில் 50 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஜெயபாண்டியம்மாள் மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கு கோவை இன்றியமையா பண்டகப் பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளிகள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதித்து நீதிபதி  தீர்ப்பு வழங்கினார்.

மருதமலை கோவிலுக்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு; யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர்  பிரபு ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன்,  வெகுவாக பாராட்டினார்.

ED ரைட் ரொம்ப ஜாலியா போகுது - அமைச்சர் உதயநிதி பதில்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios