மருதமலை கோவிலுக்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு; யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை

கோவையில் யானை தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்த நிலையில் மருதமலை கோவிலுக்கு படிக்கட்டு வழியாகவும், இருசக்கர வாகனத்திலும் பக்தர்கள் செல்ல வனத்துறை நிபந்தனை. இதே போல அனுபாவி முருகன் கோவிலுக்கு செல்லவும் வனத்துறை நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

Forest department restricts pilgrims from visiting Marudamalai temple in Coimbatore

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி பகுதியில் நேற்று மாலை யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்தார். 3 வயது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\

அதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். அதே போன்று மலை பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வயது சிறுவனை தள்ளிவிட்டு தந்தையை மிதித்து கொன்ற காட்டு யானை

அதே போன்று பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுபாவி சுப்பிரமணி சாமி திருக்கோவிலுக்கு மலை பாதை வழியாக காலை 9 மணி முதல்  மாலை 3 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வனத்துறை அறிவிப்பு. இதனை மீறி பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதித்தால் மனித, விலங்கு மோதல்  ஏற்பட்டால் அதற்கு கோவில் நிர்வாகமே பொறுப்பு என வனத்துறை அறிவிப்பு வெளியிட்டதோடு, கோவில் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கையும் வழங்கியுள்ளது.

2026-ல் ஜோசப் விஜய் எனும் நான்.. நடிகர் விஜய்க்காக நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios