கோவையில் ரசாயனத்தால் பழுக்கவைக்கப்பட்ட 25 டன் மாம்பழங்கள் அழிப்பு
கோவையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25டன் அளவுள்ள பழங்கள் அதிகாரிகளால் பழுக்க வைக்கப்பட்டது.
தமிழ் நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிவுறுதலின் பேரில் நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-I, பவள வீதி-II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 16 கடை மற்றும் கிடங்குகளில் சிறிய இரசாயன பொட்டலம் ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
பொதுத்தேர்வில் 100க்கு 138 மதிப்பெண் பெற்றும் தோல்வியடைந்த மதுரை மாணவி
அவ்வாறு பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 22 ஆயிரத்து 618 கிலோ (22.5 டன்) எடையும், மேலும் சுமார் 2510 kg (2.5 டன்) எடை அளவு உள்ள சாத்துகுடி ஆக மொத்தம் 25 ஆயிரத்து 128 kg (சுமார் 25 டன்) எடையில் பறிமுதல் செய்து மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிக்கபட்டது. அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அழிக்கப்பட்டது.
குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூபாய் 12 லட்சத்து 56 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. ரசாயனம் பயன்படுத்திய கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு அதிகரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.