பொதுத்தேர்வில் 100க்கு 138 மதிப்பெண் பெற்றும் தோல்வியடைந்த மதுரை மாணவி
மதுரையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண்கள் பெற்றதாக வெளியான தேர்வு முடிவால் குழப்பம் ஏற்பட்டள்ளது.
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியானது. இதில், கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார். இதே போன்று பல்வேறு மாணவர்களும் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், 100-க்கு 138 மதிப்பெண்கள் பெற்றும், தோல்வி அடைந்துள்ள விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆர்த்தி, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதியிருந்தார்.
தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும் எடுத்ததாக வந்தது. இந்த இரண்டு பாடப்பிரிவுகளிலும் அவர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது.மேலும் கணிதத்தில் 56 மதிப்பெண்கள், இயற்பியலில் 75 மதிப்பெண்கள், வேதியியலில் 71 மதிப்பெண்கள், உயர் கணிதத்தில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 514 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகள் வெளியானது.
குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்
ஆனால், இந்த பாடப்பிரிவுகளில் அவர் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, உயர்கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.