Asianet News TamilAsianet News Tamil

உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி – நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

அதிகப்படியான தனது 100 கிராம் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்ட நிலையில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில் வினேஷ் போகத் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vinesh Phogat has been admitted to the hospital due to dehydration after training intensively all night to reduce his excessive body weight rsk
Author
First Published Aug 7, 2024, 2:34 PM IST | Last Updated Aug 7, 2024, 2:34 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்த நிலையில் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிப் போட்டி வரை வந்த நிலையில் கூடுதல் உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு – தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!

நேற்று மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், இதில், எலிமினேஷன் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா லிவாக்கை எதிர்கொண்டார். இதில், 3-2 என்ற கணக்கில் போகத் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார்.

வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரிப்பால் தங்கம் பறிப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி; நடந்தது என்ன?

கடைசி வரை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 கிலோவை விட கூடுதலான உடல் எடை காரணமாக வினேஷ் போகத் இறுதி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபைனலுக்கு சென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை – தங்கம் அல்லது வெள்ளிக்கு வாய்ப்பு!

தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் 50 கிலோவிற்கு அதிகமான 100 கிராம் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனால், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் ஸ்கிப்பிங், ஜாக்கிங் என்று தொடர் பயிற்சி மேற்கொண்டு 100 கிராம் எடையில் வெறும் 1.85 கிலோ குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios