Asianet News TamilAsianet News Tamil

வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு – தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதி போட்டி வரை வந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Prime Minister Modi supports Vinesh Phogat and should oppose the disqualification in Wrestling 50 kg Final at Paris Olympics 2024 rsk
Author
First Published Aug 7, 2024, 1:38 PM IST | Last Updated Aug 7, 2024, 1:38 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்த நிலையில் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிப் போட்டி வரை வந்த நிலையில் கூடுதல் உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரிப்பால் தங்கம் பறிப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி; நடந்தது என்ன?

நேற்று மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், இதில், எலிமினேஷன் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா லிவாக்கை எதிர்கொண்டார். இதில், 3-2 என்ற கணக்கில் போகத் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

ஃபைனலுக்கு சென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை – தங்கம் அல்லது வெள்ளிக்கு வாய்ப்பு!

இதில், கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார். கடைசி வரை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றார். இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 கிலோவை விட கூடுதலான உடல் எடை காரணமாக வினேஷ் போகத் இறுதி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம்.

தெருவிலேயே பயிற்சி செய்து 4 முறை ஒலிம்பிக் சாம்பியனை தோற்கடித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

ஆனால், இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது என்பது உங்களது இயல்புகளில் ஒன்று. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம் என்று மோடி பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவிடம் இந்தியாவிற்கு உள்ள பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். வினேஷ் போகத்திற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவரை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios