வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரிப்பால் தங்கம் பறிப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி; நடந்தது என்ன?

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் முதல் இந்திய வீராங்கனையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில் தற்போது அதிக உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள்ளார்.

Indian Wrestler Vinesh Phogat Disqualification from womens individual 50kg Wrestling Final at Paris 2024 Olympics rsk

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும், 4 நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் எப்போது கைப்பற்றும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஃபைனலுக்கு சென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை – தங்கம் அல்லது வெள்ளிக்கு வாய்ப்பு!

நேற்று நடைபெற்ற மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார். இதில், வினேஷ், க்யூபா நாட்டு வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று 5-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்தார்.

 

 

இதுவரையில் வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருந்த இந்தியாவிற்கு இது குட்நியூஸாக இருந்தாலும் தற்போது வினேஷ் போகத் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து ஒலிம்பிக் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகாரப்பூர்வ எடையின் போது வினேஷ் 50 கிலோ வரம்பிற்கு மேல் சில கிராம்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

தெருவிலேயே பயிற்சி செய்து 4 முறை ஒலிம்பிக் சாம்பியனை தோற்கடித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

வினேஷ் போகத்தின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, எஞ்சிய போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்திய குழு வருத்தம் தெரிவித்தது. மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்ப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. அவரது உடல் எடையை குறைப்பதற்கு அணியினர் எவ்வளவு முயற்சித்த போதிலும், இன்று காலை 50 கிலோவிற்கு கூடுதலாக சில கிராம் எடையுடன் இருந்தார். ஆதலால், வினேஷின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, எஞ்சிய போட்டிகளில் மற்ற இந்திய வீரர், வீராங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி – அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்!

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வினேஷ் போகத், இறுதிப் போட்டியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சாரா அன் ஹில்டெப்ராண்ட் என்ற வீராங்கனையை எதிர்கொள்ள இருந்தார். இந்தப் போட்டி 12ஆம் நாளான இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதுவரையில் ஒலிம்பிக் ஒரு பதக்கம் கூட கைப்பற்றாத போகத்திற்கு இந்தப் போட்டி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி – 89.34மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆனால், அதிக உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறினார். காலிறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நடக்க கூட முடியாத நிலையில் வெளியேறினார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் காலிறுதி போட்டியோடு வெளியேறினார். தற்போது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், இதுவும் அவருக்கு சோகமான ஆண்டாக அமைந்துள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios