ஃபைனலுக்கு சென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை – தங்கம் அல்லது வெள்ளிக்கு வாய்ப்பு!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 11ஆவது நாளில் நடைபெற்ற மகளிருக்கான 50 கிலோ மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 60ஆவது இடத்தில் உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இதற்கான ரேஸில் தற்போது இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கியுள்ளார். இதுவரையில் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.
தெருவிலேயே பயிற்சி செய்து 4 முறை ஒலிம்பிக் சாம்பியனை தோற்கடித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!
மகளிருக்கான 50 கிலோ பிரிவில் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா விஸ்லிவ்னா லிவாக்கை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்க் முன்னேறினார். நேற்று இரவு 25 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார்.
இதில், வினேஷ், க்யூபா நாட்டு வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று 5-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும். எனினும் இறுதிப் போட்டியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சாரா அன் ஹில்டெப்ராண்ட் என்ற வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி – 89.34மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி
இந்தப் போட்டி 12ஆம் நாளான இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு வந்த முதல் மல்யுத்த வீராங்கனையாக வினேஷ் போகத் சாதனை படைத்துள்ளார். இதுவரையில் ஒலிம்பிக் ஒரு பதக்கம் கூட கைப்பற்றாத போகத்திற்கு இந்தப் போட்டி தங்கல் அல்லது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் 9ஆவது இடம் பிடித்த கிஷோர் ஜெனா!
கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறினார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் காலிறுதி போட்டியோடு வெளியேறினார். தற்போது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.