MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?

Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிட்ச் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Velmurugan s
| Updated : Mar 07 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி
Image Credit : BCCI

டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தற்போதைய சாம்பியனான இந்திய அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிட்ச் எப்படி இருக்கு..?
Image Credit : BCCI

பிட்ச் எப்படி இருக்கு..?

அசுர கொள்ளளவு: சுமார் 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், நாளை ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரப்போகிறது. பாரம்பரிய விளக்கு கோபுரங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள LED ரிங் விளக்குகள் நிழல் விழாத வெளிச்சத்தைத் தரும்.

ஆடுகளம்: இங்குள்ள 11 ஆடுகளங்களில் சிவப்பு மற்றும் கருப்பு மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சமமான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிட்ச் சீமர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இறுதிப் போட்டியில் அதிகமான பவுன்சர்களை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்காது என்று சொல்லப்படுகிறது.

200+ கண்பார்ம்..

இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கை கொடுக்குமென்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் டியூ தான் அதனை முடிவு செய்யும். மேலும் இந்திய அணியில் கிட்டத்தட்ட 8 விக்கெட் வரை அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்திருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஈசியாக 200+ ரன்களை அடிப்பார்கள் என கணிக்கப்படுகிறது.

34
இரு அணிகளின் பயணம்
Image Credit : AFP

இரு அணிகளின் பயணம்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டம் அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

நியூசிலாந்து: மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து மிரட்டியது. ஃபின் ஆலன் (33 பந்துகளில் 100 ரன்கள்) மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோரின் ஃபார்ம் இந்தியாவிற்கு சவாலாக இருக்கும்.

44
முக்கிய தகவல்கள்
Image Credit : X/BCCI

முக்கிய தகவல்கள்

போட்டி நேரம்: நாளை மாலை 7:00 மணி (டாஸ் மாலை 6:30 மணிக்கு).

நிகழ்ச்சிகள்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக மாலை 5:30 மணிக்கு சர்வதேச பாப் ஸ்டார் ரிக்கி மார்ட்டின் பங்கேற்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சாதனை வாய்ப்பு: இந்தியா வெற்றி பெற்றால், மூன்று முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றைப் படைக்கும். நியூசிலாந்து தனது முதல் டி20 உலகக்கோப்பை மகுடத்திற்காகக் காத்திருக்கிறது.

ரசிகர்களுக்கான ஏற்பாடுகள்

போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மும்பை - அகமதாபாத் இடையே சிறப்பு தேஜஸ் ரயில்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், மைதானத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் மெட்ரோ ரயில் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
சஞ்சு சாம்சன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Related Stories
Recommended image1
T20 World Cup: ஒவ்வொரு ஷாட்டும் கண்ணுல ஒத்திக்கலாம்..! பேக் டூ பேக் அரைசதம் விளாசிய சஞ்சு..
Recommended image2
டி20 உலகக்கோப்பை.. கை நழுவும் கேட்ச்கள்.. இந்தியாவின் பீல்டிங் மோசம்.. ஜாம்பவான் கவலை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved