வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஆக. 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: வினேஷ் போகத்திற்கு நியாயம் கிடைப்பதில் தாமதம்!
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் தொடர்ந்து சர்ச்சை. இறுதிப் போட்டிக்கு முன் எடைப்பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மகளிருக்கான மல்யுத்தம் இறுதிப் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த 33ஆவது ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடைசியாக ஒலிம்பிக் கொடியானது லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வழங்கப்பட்டது. இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மகளிருக்கான மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத் எலிமினேஷன் சுற்று, காலிறுதி, அரையிறுதி என்று எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அடுத்தநாள் நடைபெற இருந்த இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் கையில் தங்கப் பதக்கம் இருந்திருக்கும். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற உடல் எடை பரிசோதனையில் 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: சாதனைகளும் சர்ச்சைகளும்; பாராலிம்பிக்ஸில் திருநங்கைகள் பங்கேற்பு?
வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் போனது. இச்சம்வம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். வினேஷ் போகத் தன் உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்திருக்கிறார். அதுவும் பலனளிக்காததால் அவரது முடியை வெட்டியும், ஆடையை குறைத்தும் பார்த்துள்ளனர். அதுவும் பலனளிக்கவிலை என கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் - சச்சின், டிராவிட், சேவாக் பங்கேற்க வாய்ப்பு!
வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் அந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 13-ந் தேதி இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இன்றும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை வரும் 16ஆம் தேதி மாலை 6 மணி (பாரிஸ் நேரம்) வரை நீட்டித்துள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றும் ஒருவருக்கு மட்டும் பதக்கம் இல்லை! ஏன்?