ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் - சச்சின், டிராவிட், சேவாக் பங்கேற்க வாய்ப்பு!
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற டி20 தொடரை பிசிசிஐ விரைவில் நடத்த உள்ளது. சச்சின், டிராவிட், சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் பிசிசிஐ மூலமாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று உலகம் முழுவதும் அந்தந்த நாடுகள் மூலமாக பிக்பாஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக், டி20 பிளாஸ்ட், வங்கதேசம் பிரீமியர் லீக், லங்கன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்று டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் முன்னாள் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்தில் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 தொடர் நடத்தப்பட்டது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றும் ஒருவருக்கு மட்டும் பதக்கம் இல்லை! ஏன்?
இதில், யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இந்த தொடரில் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா என்று ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றனர். இந்த நிலையில் தான் இதே போன்று ஒரு தொடரை நடத்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் எனப்படும் எல்பிஎல் என்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கான டி20 தொடரை பிசிசிஐ விரைவில் கையில் எடுக்க உள்ளது. இதற்கு முன்னதாக ரோடு சேஃப்டி டி20 போட்டி நடத்தப்பட்டது.
சச்சினின் முதலீட்டில் சிக்கல்? நஷ்டம் ஏற்பட வாய்ப்பு!
இதில், சச்சின் மற்றும் யுவராஜ் சிங் தலைமையிலான அணிகள் மோதின. இந்த நிலையில் தான் ஓய்வு பெற்ற சீனியர் வீரர்கள் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் வகையில், பிசிசிஐ எல்பிஎல் தொடரை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுரேஷ் ரெய்னா, வீரேந்தர சேவாக், ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் உள்பட ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பாப்பேயின் அசர வைக்கும் சம்பளம்: கோலி, ரோகித்தை மிஞ்சிய சாதனை!