Asianet News TamilAsianet News Tamil

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றும் ஒருவருக்கு மட்டும் பதக்கம் இல்லை! ஏன்?

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்ஸ் கால்பந்து அணியில் ஒருவருக்கு மட்டும் பதக்கம் வழங்கப்படவில்லை. ஃபிஃபா விதிகளின்படி, பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாற்று வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்படாது என்பதால், அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது.

Only one Player of the French football team who won a silver medal at the 2024 Paris Olympics was not awarded a medal rsk
Author
First Published Aug 13, 2024, 6:56 PM IST | Last Updated Aug 13, 2024, 6:56 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில், இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி பட்டியலில் 71ஆவது இடத்துடன் நிறைவு செய்தது. அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என்று மொத்தமாக 126 பதக்கங்களை கைப்பற்றி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. இதே போன்று சீனா, 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 91 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்திருந்தது.

சச்சினின் முதலீட்டில் சிக்கல்? நஷ்டம் ஏற்பட வாய்ப்பு!

ஒலிம்பிக் தொடரை நடத்திய பிரான்ஸ் 16 தங்கம், 26 வெள்ளி மற்றும் 22 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 64 பதக்கங்களுடன் 5ஆவது இடம் பிடித்திருந்தது. இந்த தொடரில் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றது. பதக்கம் வென்ற பிரான்ஸ் அணியில் அனைவருக்கும் வெள்ளிப் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒருவரை தவிர. அந்த ஒருவருக்கு வெள்ளிப் பதக்கம் கொடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம் வாங்க…

எம்பாப்பேயின் அசர வைக்கும் சம்பளம்: கோலி, ரோகித்தை மிஞ்சிய சாதனை!

அக்‌ஷரே (Auxerre) அணியின் கோல் கீப்பரான தியோ டி பார்சின் வெள்ளிப் பதக்க கொண்டாட்டத்தின் போது கழுத்தில் பதக்கம் இல்லாமல் சக வீரர்களை சுற்றி சுற்றி வந்துள்ளார். 23 வயதான டி பார்சின் ஒரு நிமிடம் கூட அவர் கால்பந்து போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் மாற்று வீரராகவே அணியில் இடம் பெற்றிருந்தார். ஃபிஃபா (FIFA) விதிகளின்படி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாற்று வீரருக்கு பதக்கம் வழங்கப்படாது.

24 விளையாட்டு வீரர்களை அனுப்பி 4 பதக்கங்களை வென்ற ஹரியானா , 13 வீரர்களை கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒன்று கூட இல்ல!

இந்ந்த விஷயத்தில் விதிகள் தெளிவாக தெரிவிப்பது என்னவென்றால், ஒரு மாற்று வீரர், ஒரு வீரரை மாற்றிவிட்டு அணியில் இடம் பெற்று விளையாடும் பட்சத்தில், அந்த அணியானது முதல், 2 அல்லது 3ஆவது இடத்தைப் பிடித்தால், மாற்று வீரரும் பதக்கம் பெறுவார். அணியில் இடம் பெற்றிருந்த 4 மாற்று வீரர்களில் ஒருவராக டி பார்சின் இருந்தார். அவர் ஒரு நிமிடம் கூட போட்டியில் பங்கேற்கவில்லை.

ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?

ஆனால், பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த மற்ற 3 மாற்று வீரர்கள் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெற்று தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டதால், டி பார்சின் அணியில் இடம் பெறவில்லை. ஆதலால், டி பார்சினுக்கு மட்டும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படவில்லை. மற்ற 3 மாற்று வீரர்கள் உள்பட அனைவருக்கும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இதுவே ஸ்பெயின் அணியில் மாற்று வீரர்கள் உள்பட அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios