எம்பாப்பேயின் அசர வைக்கும் சம்பளம்: கோலி, ரோகித்தை மிஞ்சிய சாதனை!

ரியல் மேட்ரிட் அணியில் இணைந்துள்ள கைலியன் எம்பாப்வேயின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மாதச் சம்பளம் ரூ.23.7 கோடி, நாள் ஒன்றுக்கு ரூ.79 லட்சம், ஒரு நிமிடத்திற்கு ரூ.5,486 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஐபிஎல் ஒப்பந்தங்களை விட அதிகம்.

Real Madrid Player Kylian Mbappe Salary is 285 Crore per year and he ears Rs 5486 per minute is higher than IPL contracts of Rohit Sharma and Virat Kohli rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி கைலியன் எம்பாப்வே பிறந்தார். கால்பந்து மீது ஆர்வம் கொண்ட எம்பாப்வே சிறு வயது முதலே கால்பந்து விளையாடி வருகிறார். அசோசியேஷன் ஸ்போர்ட்டிவ் டி பாண்டி, மொனாக்கோ அணிகளுக்காக விளையாடிய கைலியன் எம்பாப்பே கடைசியாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய கைலியன் எம்பாப்வே வரும் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி தொடருக்காக ரியல் மேட்ரிட் அணியில் இணைந்துள்ளார். ஸ்பெயின் அணியான ரியல் மேட்ரிட் 15 முறை UEFA சாம்பியன்ஸ் லீக் டிராபி வென்று அதிக முறை டிராபி வென்ற அணிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

24 விளையாட்டு வீரர்களை அனுப்பி 4 பதக்கங்களை வென்ற ஹரியானா , 13 வீரர்களை கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒன்று கூட இல்ல!

இந்த அணியில் தான் கைலியன் எம்பாப்வே இணைந்துள்ளார். அவரது சம்பளம் எவ்வளவு, மாதம், வாரம் மற்றும் ஒருநாள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க….

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஐபிஎல் ஒப்பந்தங்களை விட கைலியன் எம்பாப்வே மாத சம்பளம் இன்னும் அதிகமாக உள்ளது. லாஸ் பிளாங்கோஸுடனான எம்பாப்பேயின் ஒப்பந்தத்தின்படி, ரியல் மாட்ரிட் அணியுடனான தனது முதல் ஆண்டில் மட்டும் 285 கோடி ரூபாய் சம்பளம் பெறுவார். ஆண்டிற்கு ரூ.285 கோடி என்றால் ஒரு மாதத்திற்கு எம்பாப்வே ரூ.23.7 கோடி பெறுவார். தற்போது 25 வயதாகும் எம்பாப்வே நாள் ஒன்றிற்கு ரூ.79 லட்சம் பெறுவார். அதோடு, ஒரு வினாடிக்கு மட்டும் ரூ.5,486 பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?

இதுவே இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் வருடாந்திர ஒப்பந்தத்தின் படி இருவரும் ரூ.7 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலியின் ஐபிஎல் ஒப்பந்தம் ரூ.18 கோடி ஆகும். இதே போன்று ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் வருமானம் ரூ.16 கோடி ஆகும்.

மனு பாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்? மனு பாக்கர் தந்தை விளக்கம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios