பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது சாதனைகள் மற்றும் சர்ச்சைகளின் கலவையுடன் முடிவடைந்தது. பிரேக் டான்ஸ், திருநங்கைகள் பங்கேற்பு, தவறான தீர்ப்புகள் என பல விவாதங்களை எழுப்பியது. பல்வேறு நாடுகளின் பதக்கப் பட்டியலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக்கின் 33ஆவது தொடரானது கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 329 போட்டிகளுக்காக நடத்தப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் சர்ச்சைகளின் கலவையுடன் முடிவடைந்தது.

ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் - சச்சின், டிராவிட், சேவாக் பங்கேற்க வாய்ப்பு!

Scroll to load tweet…

எனினும் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து பல்வேறு விளையாட்டுகளின் அற்புதங்களை பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிகழ்த்தியது. பிரேக் டான்ஸ் பற்றிய அறிமுகம் அதோடு அடுத்தடுத்த விவாதம் ஆகியவற்றின் காரணமாக எதிர்கால ஒலிம்பிக்கிலிருந்து அதனை அகற்ற வழிவகுத்தது. ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்பது தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்றுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தவறான தீர்ப்பு, மல்யுத்தத்தில் கூடுதல் எடை காரணமாக இந்திய வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகியவை பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் ஒலிம்பிக் தொடரானது ரசிகர்களுக்கு பல விதமான அனுபவத்தை அளித்திருக்கும்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றும் ஒருவருக்கு மட்டும் பதக்கம் இல்லை! ஏன்?

கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா இதுவரையில் 10 தங்கம், 10 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் என்று மொத்தமாக 41 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. இதே போன்று 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா, 303 தங்கம், 226 வெள்ளி மற்றும் 189 வெண்கலம் என்று மொத்தமாக 727 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. அமெரிக்கா 335 மில்லியன் மக்கள் தொகையில் 1101 தங்கம், 874 வெள்ளி மற்றும் 780 வெண்கலம் என்று 2755 பதக்கங்களை குவித்துள்ளது. 281 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தோனேசியா 10 தங்கம், 14 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என்று மொத்தமாக் 40 பதக்கங்களை குவித்துள்ளது.

சச்சினின் முதலீட்டில் சிக்கல்? நஷ்டம் ஏற்பட வாய்ப்பு!

பாகிஸ்தான் 241 மக்கள் தொகையில் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கத்துடன் 11 பதக்கங்களை குவித்துள்ளது. நைஜீரியா 223 மில்லியன் மக்கள் தொகையில் 3 தங்கம், 11 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என்று மொத்தமாக 27 பதக்கங்களை குவித்துள்ளது. பிரேசில் (203 மில்லியன்) 40 தங்கம், 49 வெண்கலம், 81 வெண்கலம் என்று மொத்தமாக 170 பதக்கங்களை குவித்துள்ளது.

Scroll to load tweet…

வங்கதேசம் 169 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை. ரஷ்யா 146 மில்லியனில் 608 தங்கம், 515 வெள்ளி மற்றும் 501 வெண்கலம் என்று மொத்தமாக 1624 பதக்கங்களை குவித்துள்ளது. மெக்சிகோ 129 மில்லியனில் 13 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 77 பதக்கங்களை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் நிறைவு விழாவில் அமெரிக்கா நடிகரும், தயாரிப்பாளருமான டாம் குரூஸ் சாகச நிகழ்ச்சி நடத்தினார். அவரிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை அமெரிக்கா நடத்துகிறது. இந்த 2028 ஒலிம்பிக் தொடர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பாப்பேயின் அசர வைக்கும் சம்பளம்: கோலி, ரோகித்தை மிஞ்சிய சாதனை!

Scroll to load tweet…