அமெரிக்க ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அமெரிக்க ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தனது முதல் சுற்றில் சகநாட்டவரான தீபிகா பலிக்கலுடன் மோதினார்.

இதில், 7-11, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் தீபிகா பலிக்கலை தோற்கடித்தார் ஜோஷ்னா சின்னப்பா.

ஜோஷ்னா தனது 2-வது சுற்றில் எகிப்தின் நெளரான் கோஹரை சந்திக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற சீன ஓபனில் தீபிகாவும், ஜோஷ்னாவும் மோதியதில் அதிலும் ஜோஷ்னா வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.