உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் ஔட் சுற்று ஆட்டத்தில் உருகுவே - போர்ச்சுகல் அணிகள் இன்று மோதுகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் ஔட் சுற்று ஆட்டத்தில் உருகுவே - போர்ச்சுகல் அணிகள் இன்று சோச்சி பிஷ்ட் மைதானத்தில் இரவு 11.30 மணிக்கு மோதுகின்றனர்.

இரண்டு முறை சாம்பியனான உருகுவே - நடப்பு ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகலுடன் மோதுவதால் இதில் விறுவிறுப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லுயிஸ் ஸ்வாரஸ் (உருகுவே) ஆகியோர் உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. 

தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ரொனால்டோவின் அற்புத ஆட்டத்தால் வென்று நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பெயினுடன் சமன் செய்தும் 1 வெற்றி, 1 சமன் என்றும் போர்ச்சுகல் தகுதி பெற்றுள்ளது.  முற்றிலும் ரொனால்டோவை சுற்றியே அந்த அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. ஏனைய வீரர்கள் சிறந்த திறனுடன் விளங்கினாலும், ரொனால்டோவின் ஆட்டம் அவர்களை வெளிப்படுத்த விடாமல் செய்து விடுகிறது என்பது பாதகமான விஷயம். 

அதேநேரத்தில் உருகுவே அணி மட்டுமே தகுதிச்சுற்றில் எதிரணிக்கு ஒரு கோலை கூட விட்டு கொடுக்காமல் நாக் ஔட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கேப்டன் டீகோ கோடின், நட்சத்திர வீரர் லூயிஸ் ஸ்வாரஸ், ஜிமென்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் ரொனால்டோவுக்கு டஃப் கொடுப்பர். 

இரண்டு அணி வீரர்களும் சமபலத்துடன் களத்தில் உள்ளதால் இந்த ஆட்டம் ரணளமாக இருக்கும்.