இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர்கள் தமிழில் பேசிக்கொண்ட வீடியோ வைரலாகிவருகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. 

அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே சுருண்டது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் குரானின் கேட்ச்சை தினேஷ் கார்த்திக் பிடித்திருந்தால், முதல் நாளே இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்கும். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், இங்கிலாந்து அணி இன்றும் முதல் இன்னிங்ஸை தொடர உள்ளது. 

நேற்றைய போட்டியில் தமிழக வீரர்கள் தமிழில் பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஷ்வின் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ராகுல் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் தமிழ் தெரியும். ஏற்கனவே முரளி விஜய் ராகுலிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலானது. 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் அஷ்வின் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை ஜென்னிங்ஸ் எதிர்கொண்டார். அந்த பந்து நன்றாக சுழன்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. இதையடுத்து, நீ வெற லெவல் மாமா.. அப்படியே போடு தூக்கிடலாம் என தினேஷ் கார்த்திக் அஷ்வினிடம் தமிழில் சொன்னார். அவர் பேசியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. அதன்பிற்கு, நன்றாக போட்டாய்.. அப்படியே போடு.. என்ன செய்கிறார் என பார்ப்போம்? என கூறுகிறார். தமிழக வீரர்கள் களத்தில் தமிழில் பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en-gb"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/RVz0qIzkqF">pic.twitter.com/RVz0qIzkqF</a></p>&mdash; Hit wicket (@sukhiaatma69) <a href="https://twitter.com/sukhiaatma69/status/1024625533122953217?ref_src=twsrc%5Etfw">1 August 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>