வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தன் தந்தைக்கு உதவுவதற்காகவும் குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம், அர்ஜுனா விருது பெற்ற அரியானா வீரர் தினேஷ் குமார் சைக்கிளில் குல்பி ஐஸ் விற்றுக்  வரும் நிலை அனைவரையும் சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது.

அரியானா மாநிலத்தில் உள்ள பிவானி பகுதியை சேர்ந்தவர் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான இவர் நாட்டுக்காக ஒட்டுமொத்தமாக இதுவரை 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். மேலும், சிறந்த வீரருக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருது தினேஷுக்கு வழங்கப்படடது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாலை விபத்தில் தினேஷ் காயம் அடைந்ததை தொடர்ந்து அவரது சிகிச்சைக்காக, தந்தை  அதிக அளவில் கடன் பெற்று இருந்துள்ளார். பின்னர் தான்  சிகிச்சை பெற்று தற்போது உடல் நலத்துடன் இருக்கும் தினேஷ் தன்னை காப்பாற்றிய, அவரது தந்தைக்கு உதவியாக இருக்கும் நோக்கியில் அவருடன்  இணைந்து குல்பி ஐஸ் விற்று வருகிறார்.

இவ்வளவு திறமை இருந்தும் விதி அவரது வாழ்கையில் விளையாடி விட்டது. இது குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்த தினேஷ், தனக்கு நிலையான அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும், என்னை போன்று  விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தான் வகுப்பு எடுத்து அவர்களை திறமையான வீரர்களை உருவாக்குவேன் என அவர்  தெரிவித்து உள்ளார்.

நாட்டிற்காக விளையாடி பெருமை சேர்த்த ஒருவருக்கு நம் நாடு என்ன செய்ய போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு  கிளம்பி உள்ளது.