சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி திகழ்கிறார். மிகவும் திறமையான வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால், ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. உலகின் தலைசிறந்த வீரராக கோலி வலம்வருகிறார். 

இந்நிலையில், கோலியைவிட இந்திய வீரர் கேஎல்.ராகுல் மிகச்சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தற்போதைய சூழலில் இந்திய வீரர் ராகுல் தான் உலகின் தலைசிறந்த வீரர். ராகுலின் பேட்டிங்கை பார்த்து மிரண்டுவிட்டேன்.

மிகச்சிறந்த திறமைசாலி ராகுல். உலகின் எந்தவிதமான பவுலிங்கையும் திறமையாக எதிர்கொண்டு ஆடக்கூடியவர் ராகுல். ராகுல் ஆடுவதை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என ஷேன் வாட்சன் தெரிவித்தார்.