தென் மண்டல அளவிலான கால்பந்தாட்டப் போட்டிக்கு, காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி தகுதிப் பெற்றது.

கர்நாடக மாநிலம், குல்பர்காவில் தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி, தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை திங்கள்கிழமை, சங்கரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் விஷ்ணுபோத்தி, பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசலு ஆகியோர் பாராட்டி, சீருடைகளை வழங்கினர்.

பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரியும், விளையாட்டுத் துறை இயக்குநருமான இராமச்சந்திரன், நிதி அலுவலர் இரவீந்திரன், பேராசிரியர் சாரங்கன், பல்கலைக்கழக உடற்கல்வித் துறை கால் பந்தாட்ட அணியின் பயிற்சி மற்றும் மேலாளர்கள் வினோத்குமார், ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.