பஞ்சாப் கிங்ஸை பஞ்சு பஞ்சாக்கிய சுனில் நரைன், பிலிப் சால்ட் – வான்கடேயில் கேகேஆர் 261 ரன்கள் குவிப்பு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 42ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்துள்ளது.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
KKR vs PBKS 42nd IPL Match
நரைனைத் தொடர்ந்து பிலிப் சால்ட்டும் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேறினார். கடைசியில் வந்த ரிங்கு சிங் 5, ரமன்தீப் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
KKR vs PBKS, IPL 2024
இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், சாம் கரண் மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
இந்தப் போட்டியில் கேகேஆர் 2ஆவது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 272/7 ரன்கள் குவித்தது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள் அடித்ததைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கேகேஆர் 18 சிக்ஸர்கள் விளாசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.