Asianet News TamilAsianet News Tamil

Relationship Tips : உங்கள் உறவுகள் வலுவாக இருக்க முதலில் 'இந்த' பழக்கங்களுக்கு குட் பை சொல்லுங்கள்!

உங்கள் உறவுகள் வலுவாக இருக்க நீங்கள் விரும்பினால், முதலில் உங்களிடம் இருக்கும் இந்த பழக்கங்களை விட்டுவிடுங்கள். அவை..

relationship tips be careful these bad habits that can ruin your relationship in tamil mks
Author
First Published Apr 26, 2024, 11:30 PM IST

மனித வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்கது என்னவென்றால், அது உறவுகள் சில. அவர்கள் ஒவ்வொரு அடியிலும் ஆதரிக்கிறார்கள் மற்றும் ஊக்குவிக்கிறார்கள். உதாரணத்திற்கு, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், கணவன்-மனைவி, நட்பு போன்ற உறவுகள்.. ஆனால் சில சமயங்களில் சில சிறிய விஷயங்கள் அல்லது நமது நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அந்த உறவுகளில் விரிசல் வர வாய்ப்பு அதிகம். பல சமயங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அந்த உறவுகளை உடைக்கிறது. பின்னர் விரும்பிய பிணைப்புகளை பராமரிப்பது கடினமாகிறது.

நமது நடத்தை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துகிறது. ஏனென்றால், பல சமயங்களில் நாம் மற்றவர்களிடம் புண்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லிவிடுவோம் அல்லது மோசமாக உணரும் வகையில் நடந்து கொள்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாவிட்டால், உறவுகளுக்கு இடையிலான விரிசல் ஆழமடையும். இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்தால், உடனடியாக அவற்றை மாற்றிவிடுங்கள். அதுதான் நல்லது. அந்தவகையில் இந்த கட்டுரையில், உங்கள் உறவுகள் வலுவாக இருக்க நீங்கள் விரும்பினால், முதலில் உங்களிடம் இருக்கும் இந்த பழக்கங்களை விட்டுவிடுங்கள். அவை..

உறவுகள் வலுவாக இருக்க என்ன விட வேண்டிய பழக்கங்கள்:

பொறுப்புகளில் இருந்து ஓடுவது: பலர் தங்கள் பொறுப்புகளை விட்டு ஓடிவிடுகிறார்கள் அல்லது மற்றவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது உறவில் விரிசலை ஏற்படுத்தும். உதாரணமாக, கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால், வீட்டு பொறுப்புகளை பிரிக்க வேண்டும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்க கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப்போடுவது அல்லது ஓடிப்போனாலோ கணவன்-மனைவிக்குள் தகராறு அதிகரிக்கும். இதன் காரணமாக, உறவு படிப்படியாக விரிவடையத் தொடங்கிவிடும்.

வாதாடுவது: யாருடைய பேச்சையும் கேட்காத பழக்கம் பலருக்கு உண்டு. உறவில் இப்படி இருந்தால் விரிசல் வரும். எதிர்தரப்பினரின் பேச்சைக் கேட்காமல் ஒவ்வொரு முறையும் நீங்கள் வாதிட்டால், அது அவர்களை காயப்படுத்தலாம். எனவே, நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் எதிர்தரப்பினர் பேசுவதை முதலில் கேளுங்கள். அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அவமானம்: தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், சிலர் மற்றவர் செய்யும் அந்த தவறை மனதில் வைத்து பிறர் முன் அவரை  அவமானப்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் உறவுகளுக்கிடையேயான தூரம் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே உறவு மதிப்புக்குரியதாக இருந்தால் பழைய விஷயங்களை உடனே மறப்பது தான் நல்லது. குறிப்பாக, மற்றவரை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மரியாதை: எந்தவொரு உறவிலும் மரியாதை ரொம்ப ரொம்ப முக்கியமானது. பல சமயங்களில் சிலர் வேண்டுமென்றே அல்லது நகைச்சுவையாக மற்றவரிடம் எதையாவது சொல்லிவிடுவார்கள். ஆனால், அது அவர்களை  காயப்படுத்தும் என்று கூட அவர்கள் யோசிப்பதில்லை. எனவே, எக்காரணம் கொண்டும் பிறரை அவமதிக்காதீர்கள். இல்லையெனில், உறவில் விரிசல் வரும்.

சின்ன சின்ன விஷயங்களில் கோபம்: பிடிக்காத விஷயத்திற்கு கோபம் வருவது இயற்கையானது. ஆனால் சிலருக்கு சின்ன சின்ன விஷயத்துக்கே கோபம் வரும். ஆனால், தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், ஒருவர் சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், முதலில் மற்றவருக்கு மெதுவாக விளக்கலாம். அவர்களிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios