உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம் வென்றார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்து வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நேற்று நடந்த ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் 262.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய சீனாவின் ஷெங் லிஹாவோ ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பைபிள் பிரிவில் 264.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
டியூ லின்ஷூ 263. 3 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று பெண்களுக்கான 10 மீட்டர் பிரிவில் சீனாவை சேர்ந்த ஹூவாங் யூட்டிங் தங்கம் வென்றார். இதில் இந்தியாவின் ரமிதா 260.5 புள்ளிகளுடன் 4ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் நாளின் முடிவில் சீனா 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து, இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெணகல பதக்கம் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இரண்டு நாளில் ருத்ராங்க்ஷ் இரண்டு வெண்கல பதகங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023: ஜிஎஸ்டி இல்லாமல் மட்டும் ரூ.20,000 வரையிலும் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்!