தோனியின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. இப்போட்டியில் தோனி, ஆட்டத்தின் முடிவில் நடுவரிடமிருந்து பந்தை வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒருநாள் போட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிகுறியாக என கூறப்படுகின்ற.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.  3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி முடிந்து வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பியபோது போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தை தோனி வாங்கிக்கொண்டார். இது பொதுவாகவீரர்கள் ஓய்வு பெறும் முன் செய்யும் நடைமுறை என்பதால், தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.