Asianet News TamilAsianet News Tamil

சர்வதே போட்டிகளில் தோனி படைத்த புதிய சாதனை! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

MS Dhoni Breaks Pakistan Kamran Akmal T20I Stumping Record
 MS Dhoni Breaks Pakistan's Kamran Akmal T20I Stumping Record
Author
First Published Jul 5, 2018, 10:31 AM IST


சர்வதேச டி20  போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்கிற பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் சாதனையை நம்ம தல மகேந்திர சிங் தோனி அதிரடியாக முறியடித்துள்ளார்.    இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் என்று கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த பாராட்டுகளுக்கு மத்தியில் தல தோனி செய்த ஒரு சூப்பர் சாதனை அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. MS Dhoni Breaks Pakistan's Kamran Akmal T20I Stumping Record அதாவது சர்வதேச டி20  போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்கிற சாதனையை படைத்துள்ளார் தோனி. இதற்கு முன்பு வரை பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் 32 ஸ்டம்பிங்குகள் செய்ததே டி20  போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் செய்த அதிக ஸ்டம்பிங்குகள் என்கிற சாதனையாக இருந்தது. ஆனால்  இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தோனி இந்த சாதனையை முறியடித்தார். MS Dhoni Breaks Pakistan's Kamran Akmal T20I Stumping Record  90 டி 20 போட்டிகளில் விளையாடி 31 ஸ்டம்பிங்குகள் செய்து அதிக ஸ்டம்பிங்குகள் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி இரண்டாம் இடத்தில் இருந்தார்.  நேற்றைய (03-07-2018)  போட்டியின் போது தோனி இங்கிலாந்து வீரர்கள் இரண்டு பேரை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கி அசத்தினார்.  MS Dhoni Breaks Pakistan's Kamran Akmal T20I Stumping Record இதன் மூலம் 91 டி20  போட்டிகளில் விளையாடிய தோனி 33 பேரை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கி பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மலின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். தோனி படைத்த இந்த சாதனை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios