தன் மகன் ரோகித் சர்மா மாத சம்பளத்திற்கு வேலைக்கு போகணும் என்று ஆசைப்பட்ட அம்மா – HBD Rohit Sharma!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பாக ரசிகர்களான உங்களுடன் இணைந்து ரோகித் சர்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Rohit Sharma 37th Birthday
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். இந்திய அணியை வெற்றிப்பாதையில் வழிநடத்தி வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான டிராபிகளை சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் கைப்பற்றியிருக்கிறது.
Rohit Sharma
நாட்டின் 2ஆவது உயரிய விருதான அர்ஜூனா விருது கடந்த 2015 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2020ல் ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது.
Indian Cricket Team Rohit Sharma
உலக கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஒரே நாயகன் என்ற சாதனையை 264 ரன்கள் குவித்து படைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 209 மற்றும் 208 ரன்கள் என்று ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 200 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
Rohit Sharma
ரோகித் சர்மாவின் அப்பா போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் தனது வேலையை இழக்க, முழு பொறுப்பும் ரோகித் சர்மாவிடம் சென்றது. இதையடுத்து பொறுப்பை உணர்ந்த ரோகித், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்காக கிரிக்கெட் விளையாடி, குடும்ப சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கு ரஞ்சி டிராபியில் விளையாடினார்.
Rohit Sharma
ரோகித் சர்மா கிரிக்கெட் வீரராக வருவதை அவரது அம்மா விரும்பவில்லை. மேலும், அவர் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றி மாத சம்பளம் பெறவே ஆசைப்பட்டார். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா, தனது கனவில் உறுதியாக இருந்தார்.
April 30, Rohit Sharma 37th Birthday
ரோகித் சர்மா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தாயார், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆதலால், ரோகித்திற்கு ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பல மொழிகளும் அறிந்தவர்.
Rohit Sharma 37th Birthday Today
ரோகித் சர்மா ஒரு ஆஃப் ஸ்பின்னராக கிரிக்கெட் வாழ்க்கையை முதலில் தொடங்கியிருக்கிறார். ஸ்கூல்பீஸ் கட்டுவதற்கு கூட போதுமான நிதி இல்லாத நிலையில், அவரது கிரிக்கெட் திறமையை கண்டு வியந்த ஸ்கூல் நிர்வாகம் அவருக்கு உதவித் தொகை வழங்கியது.
Rohit Sharma Birthday
டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உட்பட 2 வெவ்வேறு அணிகளுடன் ஐபிஎல் டிராபி வென்ற லக்ஷ்மிபதி பாலாஜி, பிரக்யா ஓஜா மற்றும் இர்பான் பதான் ஆகியோருடன் இடம் பெற்றிருந்த ஒரே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.
Rohit Sharma
ரோகித் சர்மா பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். குழந்தை பருவம் முதல் குடும்ப பாரம்பரியத்தை பின்பற்றி வந்துள்ளார். ஆனாலும், வீட்டிற்கு வெளியில் முட்டை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒருமுறை 45 முட்டைகளை சாப்பிட நண்பர் சவால் விட, எந்தவித சிரமமும் இல்லாமல் அவர் 45 முட்டைகளையும் சாப்பிட்டுள்ளார்.
Rohit Sharma 37th Birthday
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டின் 2006-07 ஆம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக விளையாடி, 13 ஓவர்களில் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்பட 101 (நாட்அவுட்) ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார்.
Happy Birthday Rohit Sharma
சவுரவ் கங்குலிக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையில் நாக் அவுட் போட்டியில் சதம் விளாசிய 2ஆவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதுவரையில் ரோகித் சர்மா உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் விளாசியுள்ளார். உலகக் கோப்பையில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா தான் நம்பர் 1.