கோடி ரூபாய் மதிப்பில் வீடு, கார்: தமிழக வீரர் சாய் சுதர்சனின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.7.3 கோடி ஆகும்.
Sai Sudharsan House
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு ஆண்டுக்கான 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
Sai Sudharsan Net Worth
இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் சாய் சுதர்சன் 334 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 8 மற்றும் 5 போட்டிகளில் விளையாடி 362 ரன்கள் மற்றும் 145 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.
Sai Sudharsan Cars Collection
இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் சாய் சுதர்சன் 2 அரைசதம் உள்பட 418 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
Sai Sudharsan Salary, Net Worth
கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் சாய் சுதர்சன். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மூலமாக கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் அவர் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடினார். 2018 ஆம் ஆண்டு தனது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
Sai Sudharsan Salary, Net Worth
சாய் சுதர்சனின் நிகர சொத்து மதிப்பு ரூ.7.3 கோடி ஆகும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரூ.20 லட்சத்திற்கு வருமானம் பெறுகிறார். சாய் சுதர்சன் இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர். மைதானத்தில் அவரது செயல்பாடு காரணமாக பல்வேறு பிராண்டுகளை ஈர்த்துள்ளது. நைக், கோகோ கோலா மற்றும் பெப்சி உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் விளம்பர தூதராக இருந்துள்ளார்.
Sai Sudharsan Net Worth
சாய் சுதர்சன் கார் கலெக்ஷன்:
கார் பிரியரான சாய் சுதர்சன், லம்போர்கினி ஹூராகன், மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபியூ எக்ஸ்5 என்று ஆடம்பரமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இந்த கார்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.
Sai Sudharsan Net Worth
சாய் சுதர்சன் வீடு:
சாய் சுதர்சனின் ஆடம்பரமான வீடு சென்னையில் உள்ளது. இந்த வீடானது நவீன வசதிகள் மற்றும் அதிநவீன உள் அலங்காரங்களுடன் கூடிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் பல கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.