Asian Champions Trophy 2023 நடப்பு சாம்பியன் கொரியாவை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற மலேசியா!

தென் கொரியாவுக்கு எதிராக நடந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Malaysia beat defending champion Korea by 6-2 and entered into Asian Champions Trophy final for the first time

சென்னையில் நடந்து வந்த 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடின.

ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் பெறும் விராட் கோலி; நம்பர் ஒன் இடத்தில் ரொனால்டோ ரூ.26.7 கோடி!

இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. எனினும், இன்று 5 ஆவது மற்றும் 6ஆவது இடத்திற்காக இரு அணிகளும் மோதின. இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் 6 கோல் அடிக்க சீனா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது.

ஆசிய கோப்பைக்கு தீவிரமாக ஜிம் பயிற்சி செய்யும் ரோகித் சர்மா!

இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல் மற்றும் 2 போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள மலேசியாவும், 3ஆவது இடத்தில் உள்ள தென் கொரியா அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. தற்போது 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன.

Yashasvi Jaiswal: இந்திய அணியின் எதிர்காலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நாசர் ஹூசைன் பாராட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios