Yashasvi Jaiswal: இந்திய அணியின் எதிர்காலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நாசர் ஹூசைன் பாராட்டு!
இந்திய அணியின் எதிர்காலம் தான் இளம் வீரர் யஷஸ்வி ஜெஸ்வால் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று தனது சிறப்பான பேட்டிங்கின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றவர் இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்தார். மேலும், ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும்.
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக அறிமுகமாகி பல சாதனைகளை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். ஆனால், ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ICC ODI Word Cup 2023 Tickets: வரும் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை!
மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில், தான் இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் திறமையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் பாராட்டியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2ஆவது அரையிறுதியில் ஜப்பான் உடன் பலப்பரீட்சை!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார். அவர் பற்றி ரிக்கி பாண்டிங்குடன் பேசினேன். அப்போது, யஷஸ்வியால் சர்வதேச அளவிற்கு கூட விளையாட முடியும் என்று கூறினார். முதல் தர கிர்க்கெட் என்று சொல்லக் கூடிய ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் தான் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. இது இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த காலம். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் சிறந்த எதிர்காலமே யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2ஆவது டி20 போட்டியில் திலக் வர்மா விளையாடிய விதம் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள், வர்மா தான் இந்திய அணியின் அடுத்த எதிர்காலம் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Asian Games 2023: மீண்டும் வருவேன்: வாய்ப்பு பற்றி கவலை இல்லை – ஷிகர் தவான்!