ICC ODI Word Cup 2023 Tickets: வரும் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை!
உலகக் கோப்பைக்கான 2023 டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இதற்காக 10 மைதானங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 27 ஆம் தேதி உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. ஆனால், நவராத்திரி விழா, போக்குவரத்து சிக்கல் மற்றும் பாதுகாப்பு காரணமாக போட்டி அட்டவணையி சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2ஆவது அரையிறுதியில் ஜப்பான் உடன் பலப்பரீட்சை!
வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. மேலும், சில போட்டிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான டிக்கெட் வரும் 25 ஆம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. இந்தியா அல்லாத . வார்ம் அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத நிகழ்வு போட்டிகளுக்கான டிக்கெட்டானது வரும் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
Asian Games 2023: மீண்டும் வருவேன்: வாய்ப்பு பற்றி கவலை இல்லை – ஷிகர் தவான்!
ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுகள் ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளம், புக் மை ஷோ, பேடிஎம் மற்றும் பேடிஎம் இன்சைடர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதியாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே இந்த பெயர் - உதயநிதி தகவல்!
ஆகஸ்ட் 30 – கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கும் போட்டிகள்
ஆகஸ்ட் 31 – சென்னை, டெல்லி மற்றும் புனேயில் நடக்கும் இந்தியா போட்டிகள்
செப்டம்பர் 01 – தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடக்கும் இந்தியா போட்டிகள்
செப்டம்பர் 02 – பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் இந்தியா போட்டிகள்
செப்டம்பர் 03 – அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்தியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
செப்டம்பர் 15 – அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனையானது வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.