Asian Games 2023: மீண்டும் வருவேன்: வாய்ப்பு பற்றி கவலை இல்லை – ஷிகர் தவான்!

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறாததால் அதிர்ச்சி அடைந்தேன் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Will be back: No worries about chance said Shikhar Dhawan

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் சீனாவிலுள்ள ஹாங்சோவில் நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே இந்த பெயர் - உதயநிதி தகவல்!

ஆசிய விளையாட்டு போட்டி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மவி, ஷிவம் துபே, பிராம்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

ஸ்டாண்ட்பை பிளேயர்ஸ்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் கூடா, சாய் சுதர்சன்.

IND vs PAK Hockey: பெனால்ட்டி கார்னரில் கோல் அடித்து 4-0 என்று இந்தியா வெற்றி, பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான்!

டெல்லியில் பிறந்து வளர்ந்த ஷிகர் தவான் 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். கடைசியாக, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டு வந்தார். மாறாக, ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்று விளையாடினார்.

கேஎல் ராகுல், சுப்மல் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது வருகையால், ஷிகர் தவானுக்கு வாய்ப்பு குறைந்தது. சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் தான் கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படட்து. ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தமிழக முதல்வருடன் கெத்தா, கம்பீரமாக நடந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்த நிலையில், இது குறித்து பேசிய ஷிகர் தவான் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதன் பிறகு தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்தின் மனநிலையை புரிந்து கொண்டேன். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

இன்று இலையென்றாலும் என்றாவது ஒரு நாள் அணிக்கு திரும்புவேன். அதற்கான வாய்ப்பு பற்றியெல்லாம் கவலையில்லை, எனது பேட்டிங் பயிற்சியை விடாமல் செய்து வருகிறேன். இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறேன். அடுத்ததாக ஐபிஎல், விஜய் ஹசாரே தொடர், சையத் முஷ்டாக் அலி தொடர் நடக்க இருக்கிறது. அதற்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி உள்பட 9 போட்டியில் மாற்றம்: எந்தெந்த போட்டி? எப்போது நடக்கிறது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios