இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தமிழக முதல்வருடன் கெத்தா, கம்பீரமாக நடந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் கடைசி ரவுண்ட் ராபின் போட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் வருகை தந்தனர்.

Indian Cricketer Ravichandran Ashwin watch India vs Pakistan Hockey Match at Chennai

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி உள்பட 9 போட்டியில் மாற்றம்: எந்தெந்த போட்டி? எப்போது நடக்கிறது?

தற்போது வரையில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 3ல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. மலேசியாவும் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 9 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. 3ஆவது இடத்தில் கொரியா உள்ளது. 2 போட்டிகளில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

Asian Champions Trophy Hockey:இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் – ரெக்கார்ட்ஸ் என்ன சொல்லுது?

பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து, 2 போட்டிகளில் டிரா ஆன நிலையில், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. கடைசி 2 இடங்களில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் உள்ளன. ஒரு போட்டியில் கூட இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இன்று நடந்த முதல் போட்டியில் ஜப்பான் மற்றும் சீனா அணிகள் மோதின. இதில், ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது போட்டியில் மலேசியா மற்றும் கொரியா அணிகள் மோதின. இதில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

WI vs IND 3rd T20 Matchல் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவருடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரையில் இந்தியா கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு 2 கோல் அடித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios