ஆசிய கோப்பைக்கு தீவிரமாக ஜிம் பயிற்சி செய்யும் ரோகித் சர்மா!
ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதற்காக ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2023 தொடர் நடக்கிறது. வரும் 31 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்தப் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
Yashasvi Jaiswal: இந்திய அணியின் எதிர்காலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நாசர் ஹூசைன் பாராட்டு!
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறுவது உறுதி. இவர்கள் தவிர சுப்மன் கில், யஷஸ்வி ஜெஸ்வால், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெறுவது அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் விளையாடுவதைப் பொறுத்தே அமையும்.
மேலும், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஆகியோர் இடம் பெறவும் வாய்ப்பு உண்டு. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஜிம்மில் தீவிரமாக உடற்பற்சி செய்து வருகின்றனர்.
ICC ODI Word Cup 2023 Tickets: வரும் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை!
ஆம், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.