ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் பெறும் விராட் கோலி; நம்பர் ஒன் இடத்தில் ரொனால்டோ ரூ.26.7 கோடி!
இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பதிவுக்கு ரூ.26.7 கோடி வரையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வருமானம் பெறுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கிரிக்கெட் மட்டுமின்றி முதலீடு, சொத்துக்கள் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார். வருத்திற்கு ரூ.1050 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். சமூக வலைதளம் மூலமாக விராட் கோலிக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.
ஆசிய கோப்பைக்கு தீவிரமாக ஜிம் பயிற்சி செய்யும் ரோகித் சர்மா!
விராட்கோலியை இன்ஸ்டாகிராம் மூலமாக 256 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். தனது ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக ரூ.11.45 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.3.35 கோடி வரையில் வருமானம் ஈட்டி வந்தார். ஆனால், இப்போது அது ரூ.11.45 கோடியாக உயர்ந்துள்ளது.
Yashasvi Jaiswal: இந்திய அணியின் எதிர்காலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நாசர் ஹூசைன் பாராட்டு!
இதன் மூலமாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 3ஆவது இடம் பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 26.7 கோடியும், லியோனல் மெஸ்சி ரூ.21.5 கோடி வரையிலும் வருமானம் ஈட்டி வருகின்றனர். விராட் கோலிக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவர் ஒரு பதிவிற்கு ரூ.4.4 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார்.