இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ரன் அவுட்டாக்கி, ரூட்டுக்கு பதிலடி கொடுத்து வழியனுப்பி வைத்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

தொடக்க வீரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினர். இருவரும் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு ஆடினர். ஆனால் அஷ்வின் வீசிய 9வது ஓவரில் குக் போல்டாகி வெளியேறினார். அதன்பிற்கு ஜென்னிங்ஸுடன் ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியதோடு ரன்களையும் சேர்த்தது.

முகமது ஷமியின் பவுலிங்கில் இன்சைட் எட்ஜ் ஆகி ஜென்னிங்ஸ் போல்டானார். 42 ரன்களில் ஜென்னிங்ஸ் அவுட்டானார். டேவிட் மாலனை 8 ரன்களில் வெளியேற்றினார் ஷமி. ரூட்டும் பேர்ஸ்டோவும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.  இந்த ஜோடி களத்தில் நின்றபோது போட்டி இந்தியாவிடமிருந்து விலகி இங்கிலாந்து வசம் சென்றது போன்று இருந்தது.

ஆனால் இந்த ஜோடி தேவையில்லாமல் பிரிந்தது. 63வது ஓவரின் 3வது பந்தை அடித்த பேர்ஸ்டோ, இரண்டு ரன்களுக்கு ரூட்டை அழைத்தார். ரூட்டும் ஓடினார். ஆனால், பந்தை பிடித்த கோலி நேரடியாக ஸ்டம்பை அடித்து, ரூட்டை ரன் அவுட்டாக்கினார்.

இங்கிலாந்து கேப்டன் ரூட் அவுட்டானதும், முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் கோலி. மேலும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்த ரூட், பேட்டை தூக்கி போட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார்.

The best bit about the Kohli mic drop is how he says ‘mic drop’ while he’s doing it. https://t.co/sbBFnh7pAw
— Richard Irvine (@richirvine) August 1, 2018

நேற்று ரூட்டை ரன் அவுட்டாக்கியதும் அவர் பேட்டை தூக்கி போட்டதைப்போலவே செய்கை செய்து ரூட்டை வழியனுப்பி வைத்தார் கோலி.

pic.twitter.com/pQd0SWpHGA
— SUSHANT SK (@sushant_SK6) August 2, 2018

ஒருநாள் போட்டியில் ரூட் செய்த செய்கைக்கு பதிலடி கொடுத்து அனுப்பினார் கோலி. பொதுவாகவே எதிரணி வீரர்கள் செய்யும் செய்கையை, வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் செய்து பதிலடி கொடுப்பது கோலியின் வழக்கம். அப்படியிக்கையில், அருமையான வாய்ப்பு கிடைக்கும்போது விட்டுவிடுவாரா என்ன? வைத்து செய்துவிட்டார் கோலி.