Asianet News TamilAsianet News Tamil

Paris 2024 Olympics: பதக்கத்தை நழுவவிட்ட ரமீதா ஜிண்டால் – 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் 7ஆவது இடம்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 7ஆவது இடம் பிடித்து பதக்கத்தை நழுவவிட்டுள்ளார்.

Indian Shooter Ramita Jindal finished 7th place with 145.3 Points in women's 10m air rifle final at Paris 2024 Olympics 2024 rsk
Author
First Published Jul 29, 2024, 1:55 PM IST | Last Updated Jul 29, 2024, 1:55 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இந்தியா வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, பேட்மிண்டன், குதிரையேற்றம், நீச்சல், தடகளப் போட்டி, குத்துச்சண்டை, கோல்ஃப், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதல் நாளில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவு, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

காருன்னா யாருக்கு தான் பிடிக்காது – தோனியைப் போன்று கேரேஜில் கார்களை குவிக்கும் சூர்யகுமார் யாதவ்!

மகளிருக்கான ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் பதக்கமான வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த பெண்மணி என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.

Rohit Sharma Wins T20 World Cup – இந்திய அணி டிராபி வென்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவு!

இதே போன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் 10மீ ஏர் ரைபிள் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

Paris 2024: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 3: இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பாரா ரமீதா ஜிண்டால்?

இந்த நிலையில் தான் 3ஆவது நாளான ஜூலை 29 ஆம் தேதி இன்று, இந்தியா பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, வில்வித்தை ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் தற்போது நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 145.3 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.

முதலில் தகுதிச் சுற்று போட்டியில் 631.5 புள்ளிகள் பெற்று 5ஆவத் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசியான் முல்லருடன் போட்டி போட்டார். இந்தப் போட்டியில் முதல் 9 ஷாட்டுகளுக்கு பிறகு ரமீதா 3ஆவது இடத்தில் இருந்தார். ஆனால், 10ஆவது ஷாட்டில் 9.7 எடுக்கவே அவர் 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்தப் போட்டியில் கொரியா வீராங்கனை ஹெச்.ஜே.பான் 251.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஒய் டி ஹூயாங்க் 251.8 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தின் கோக்னியாட் 230.3 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

Paris 2024:இந்தியாவிற்கு முதல் பதக்கம் வெண்கலம் வென்று கொடுத்த மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்து மோடி வாழ்த்து!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios