Asianet News TamilAsianet News Tamil

பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது!National Sports Awardsஐ வீரர்களுக்கு வழங்கி கௌரவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு

அர்ஜூனா, துரோணாச்சார்யா, மேஜர் தியான் சந்த் ஆகிய தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
 

India President Draupadi Murmu have presented national sports awards to winners
Author
First Published Nov 30, 2022, 5:17 PM IST

விளையாட்டுத்துறையில் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தியான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறும் வீரர், வீராங்கனைகளின் பெயர் பட்டியல் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. 

இன்று புதுடெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

விஜய் ஹசாரே டிராபி: அரையிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது சௌராஷ்டிரா! ஆட்டநாயகன் உனாத்கத்

தேசிய விளையாட்டு விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல்:

மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது:

1. ஷரத் கமல் (டேபிள் டென்னிஸ்)

அர்ஜூனா விருது:

1. சீமா புனியா (தடகளம்)
2. அல்டோஸ் பால் (தடகளம்)
3. அவினாஷ் முகுந்த் (தடகளம்)
4. லக்‌ஷ்மி சென் (பேட்மிண்டன்)
5. பிரணாய் (பேட்மிண்டன்)
6. அமித் (பாக்ஸிங்)
7. நிகத் ஜரீன் (பாக்ஸிங்)
8. பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்)
9. பிரக்ஞானந்தா (செஸ்)
10. தீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி)
11. சுஷிலா தேவி (ஜூடோ)
12. சாக்‌ஷி குமாரி (கபடி)
13. நயன் மோனி சாய்க்கியா (லான் பால்)
14. சாகர் கைலாஸ் ஓவல்கர் 
15. இளவேனில் வாலறிவன் (ஷூட்டிங்)
16. ஓம் பிரகாஷ் மிதர்வால் (ஷூட்டிங்)
17. ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்)
18. விகாஸ் தாகூர் (பளுதூக்குதல்)
19. அன்ஷு (மல்யுத்தம்)
20. சரிதா (மல்யுத்தம்)
21. பர்வீன் 
22. மன்சி கிரிஷ்சந்திரா ஜோஷி (பாரா பேட்மிண்டன்)
23. தருண் தில்லான் (பாரா பேட்மிண்டன்)
24. ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல் (பாரா பேட்மிண்டன்)
25. ஜெர்லின் அனிகா (டிஏஎட் பேட்மிண்டன்)

NZ vs IND: வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து.. மழையால் ஆட்டம் ரத்து.! ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

துரோணாச்சார்யா விருது:

1. ஜிவான்ஜோத் சிங் தேஜா (ஆர்ச்செரி)
2. முகமது அலி காமர் (பாக்ஸிங்)
3. சுமா சித்தார்த் ஷிருர் (பாரா ஷூட்டிங்)
4. சுஜித் மன் (மல்யுத்தம்)

மேஜர் தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது:

1. அஷ்வினி அக்குஞ்சி (தடகளம்)
2. தரம்விர் சிங் (ஹாக்கி)
3. பி.சி.சுரேஷ் (கபடி)
4. நீர் பஹதூர் குருங் (பாரா தடகளம்).

 

Follow Us:
Download App:
  • android
  • ios