Asianet News TamilAsianet News Tamil

NZ vs IND: வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து.. மழையால் ஆட்டம் ரத்து.! ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் பாதிக்கப்பட, 1-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

new zealand win odi series by 1 0 against india
Author
First Published Nov 30, 2022, 3:14 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகித்த நிலையில், 2வது போட்டி மழையால் ரத்தானது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்தும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை 1-1 என சமன் செய்யும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்கின.

விஜய் ஹசாரே டிராபி: ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்.. அரையிறுதியில் அசாமுக்கு கடின இலக்கை நிர்ணயித்த மகாராஷ்டிரா

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரைல் மிட்செல், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, மேட் ஹென்ரி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (13) மற்றும் ஷிகர் தவான்(28) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ரிஷப் பண்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றமளித்தார். டி20 தொடரில் 17 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், முதல் ஒருநாள் போட்டியில் 23 பந்தில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்த போட்டியிலும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார். சூர்யகுமார் யாதவ் 6 ரன்களுக்கும், தீபக் ஹூடா 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நன்றாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.

இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். தீபக் ஹூடா(12), தீபக் சாஹர் (12), சாஹல்(8), அர்ஷ்தீப் சிங் (9) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு இனி இடம் இல்லை..! பிசிசிஐ அதிரடி

220 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 54 பந்தில் 57 ரன்கள் அடித்து கான்வே ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஃபின் ஆலனும் டெவான் கான்வேவும் இணைந்து 16.3 ஓவரில் 97 ரன்களை குவித்தனர். ஃபின் ஆலன் 38 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் ரன்னே அடிக்காமலும் களத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்து அணி 18 ஓவரில் 104 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால், ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. 

இந்த போட்டி முடிவில்லாமல் முடிந்ததால் 1-0 என நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றது. இந்த போட்டி முழுமையாக நடந்திருந்தாலும், நியூசிலாந்து ஆடிய விதத்திற்கு அந்த அணி தான் 2-0 என வென்றிருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios