விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 350 ரன்களை குவித்த மகாராஷ்டிரா அணி, 351 ரன்கள் என்ற கடின இலக்கை அசாம் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் அசாம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

கர்நாடகா மற்றும் சௌராஷ்டிரா அணிகளும், மகாராஷ்டிரா மற்றும் அசாம் அணிகளும் மோதுகின்றன. மகாராஷ்டிரா - அசாம் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்துவருகிறது.

கடைசி ODI-யிலும் படுமட்டமா சொதப்பிய ரிஷப் பண்ட்.. வாஷிங்டன் சுந்தர் அபார அரைசதம்! நியூசி.,க்கு எளிய இலக்கு

இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மகாராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. காலிறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட் 126 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 168 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து அங்கிட் பாவ்னேவும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அங்கித் 110 ரன்களை குவித்தார்.

இந்திய அணி தலைமை தேர்வாளருக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்கள் பட்டியல்..! ரேஸில் இருக்கும் தமிழக வீரர்

ருதுராஜ் மற்றும் அங்கித் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் 50 ஓவரில் 350 ரன்களை குவித்த மகாராஷ்டிரா அணி, அசாம் அணிக்கு 351 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு கடினமானது என்பதால் மகாராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி.