இந்திய அணி தலைமை தேர்வாளருக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்கள் பட்டியல்..! ரேஸில் இருக்கும் தமிழக வீரர்
இந்திய அணியின் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் இருக்கும் முன்னாள் வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்திய அணி புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது பிசிசிஐ. நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் & 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் & 20 முதல் தர போட்டிகளில் ஆடிய, 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது.
இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு இனி இடம் இல்லை..! பிசிசிஐ அதிரடி
அதனடிப்படையில், முன்னாள் வீரர்களான நயன் மோங்கியா, மனிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ், அஜய் ராத்ரா, ஹேமங் பதானி ஆகியோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ நியமிக்கும் குழு, தேர்வாளர்களை தேர்வு செய்யும். ஜனவரியில் இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யும்.
NZ vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
தலைமை தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த மேற்கூறிய முன்னாள் வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இவர் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நயன் மோங்கியா தேர்வு செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான ஹேமங் பதானியும் இந்த போட்டியில் உள்ளார்.