NZ vs IND: 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the last odi against new zealand

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 3வது ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 30) கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. 

கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார்.. உடனே அவரை அணியிலிருந்து நீக்குங்க..! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடி

1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி கடைசி போட்டியிலும் ஜெயித்து ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பிலும், தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, கடைசி போட்டியில் ஜெயித்து தொடரை 1-1 என சமன் செய்யும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். முதல் போட்டியில் நன்றாக ஆடி 38 பந்தில் 36 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், 2வது போட்டியில் நீக்கப்பட்டு 6வது பவுலிங்  ஆப்சன் தேவை என்பதற்காக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். ஆனால் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவதால், கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஆடலாம். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. 

பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்லாம் இருக்காங்க.. ஆனால் அந்த பையன் வேற லெவல் பேட்ஸ்மேன்! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios