கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார்.. உடனே அவரை அணியிலிருந்து நீக்குங்க..! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடி

ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.
 

krishnamachari srikkanth opines rishabh pant wasting his chances and advice team india management to give him a break

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என 2 பெரிய ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து தோற்று இந்திய அணி அதிருப்தியும் ஏமாற்றமுமளித்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையையாவது இந்திய அணி ஜெயிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

எனவே வலுவான ஒருநாள் அணியை கட்டமைத்து ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராக வேண்டியிருக்கிறது. தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பதால், திறமையான மற்றவீரர்களுக்கு போதுமான வாய்ப்பளிக்கமுடியாமல் போகிறது.

பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்லாம் இருக்காங்க.. ஆனால் அந்த பையன் வேற லெவல் பேட்ஸ்மேன்! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

ஏற்கனவே ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவருகிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்துவிட்டு, சஞ்சு சாம்சனை புறக்கணிப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பைதொடர்களில் சொதப்பிய ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் ஆடி 17 ரன் மட்டுமே அடித்தார். முதல் ஒருநாள் போட்டியில் 23 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனாலும் 38 பந்தில் 36 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சனை உட்காரவைத்துவிட்டு, 2வது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் ஆடவைக்கப்பட்டார். ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்புவதால், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அவர் ஆட வாய்ப்பு பெறுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வாய்ப்புகளை வீணடித்துவரும் ரிஷப் பண்ட்டுக்கு சிறு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் பாண்டியா, ரிஷப், ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான்..! அடித்துக்கூறும் கம்பீர்

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரிஷப் பண்ட்டுக்கு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறு ஓய்வு கொடுக்கலாம். அவருக்கு இன்னும் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்குவதை விட ஓய்வு கொடுத்துவிடலாம். ரிஷப் பண்ட் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பது ஏமாற்றமாக இருக்கிறது. ஒருநாள் உலக கோப்பை நெருங்குகிறது. இப்போதே, ரிஷப் பண்ட் சொதப்புவதாக மக்கள் பேசிவருகின்றனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ரிஷப் பண்ட் சொதப்பிவருகிறார். தன் மீது தானே அழுத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார் ரிஷப். அவர் தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டு கம்பேக் கொடுக்க வேண்டும். இப்போது அவரது விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுத்துவருகிறார் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios