பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4 கோல் அடித்து இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் குவைத்துடன் பலப்பரீட்சை!

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் லெபனான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

India Beat Lebanon by 4-2 in Penalty Shoot Out and Entered into Final in SAFF Championship 2023

பதினான்காவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடிக்க இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நின்னு நிதானமாக ஆடிய அருண் கார்த்திக், என்.எஸ்.ஹரிஷ்; நெல்லை 159 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து நடந்த 2ஆவது போட்டியில் இந்தியா நேபாள் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் குவைத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை பெறவே, இரு அணிகளுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில், இன்று இந்தியா மற்றும் லெபனான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், இரு அணிகளுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

காயத்தோடு விளையாடிய நாதன் லயான்; ஆஸ்திரேலியா 370 ரன்கள் எடுத்து ஆல் அவுட்!

இதையடுத்து 2ஆவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடிய நிலையிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 0-0 என்று சமநிலையில் இருந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. கடைசியாக பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

பரிதாபமாக வெளியேறிய 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!

இதில், முதல் வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்தரி கோலாக மாற்றினார். இதையடுத்து லெபனான் அணி வீரர் ஹசன் மாத்துக் அடித்த கோலை இந்திய கோல் கீப்பர் கச்சிதமாக தடுக்கவே, இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் 2ஆவது வாய்ப்பில் அன்வர் அலி கோல் அடித்தார். இதே போன்று லெபனான் வீரர் வாலிட் ஷோர் ஒரு கோல் எடுத்துக் கொடுத்தார். இதனால் 2ஆவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2-1 என்றானது. இதையடுத்து கிடைத்த 3ஆவது பெனால்டி ஷூட் அவுட்டில் மகேஷ் சிங் கோல் அடித்தார். இதே போன்று லெபனான் வீரர் முகமது சதேக் ஒரு கோல் அடிக்கவே 3ஆவது பெனால்டி ஷூட் அவுட் 3-2 என்றானது.

சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!

கடைசியாக இந்தியாவிற்கு கிடைத்த 4ஆவது பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை உதாந்த சிங் குமம் சரியாக பயன்படுத்திக் கொண்டு கோல் அடித்தார். ஆனால், லெபனான் வீரர் கலீல் படார் தவறான திசையில் அடிக்கவே இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது. வரும் 4ஆம் தேதி இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios