இங்கிலாந்துக்கு எதிராக வென்ற டி20 கோப்பையை தோனிக்கு அர்ப்பணிப்பதாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடியான சதத்தால் 199 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலம் வாய்ந்த வலுவான அணியான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றிருப்பது, இந்திய அணிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக வென்ற டி20 கோப்பையை இந்திய அணியின் சீனியர் வீரரான தோனிக்கு அர்ப்பணிப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தோனி கடந்த 7ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார்.  அதனால் தோனியின் பிறந்தநாளுக்கு இந்த கோப்பையை பரிசாக அளிப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

தோனிக்கு முடி டிரிம் செய்துவிட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா, இதுதான் தோனிக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.