210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து தூக்கும் போது ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் உடற்பயிசி செய்து கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி, சனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி (33). ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். அதுமட்டுமின்றி பாடி பில்டரும் கூட. ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோக்களை எப்போதும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலமாக மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில், தான் கடந்த 15 ஆம் தேதி எப்போதும் போன்று ஜிம்மிற்கு சென்று பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது, 210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து கழுத்துக்கு பின்புறம் தோள்களில் சுமந்தபடி ஸ்குவாட் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், கீழே ஸ்குவாட் செய்ய முயன்ற நிலையில் அவரால் திரும்ப எழுந்திருக்க முடியவில்லை. அதிக எடையை தோளில் சுமந்தபடி கீழே விழும் போது எடையை முன்னோக்கி தள்ளிவிட்டு அப்படியே பின்புறம் சாய்ந்துள்ளார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்ஷித் ராணா அண்ட் சௌம்யா சர்கார்; வைரலாகும் வீடியோ!
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜெஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டம் காட்டி ஏமாத்திய சுப்மன் கில், ரஹானே: ரசிகர்கள் விமர்சனம்!
பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பதை விட மேலானவர். அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் மூலமாக கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.