கோலியின் உருவத்தை உடல் முழுவதும் டாட்டூவாக போட்டுக் கொண்ட ரசிகர்: வைரலாகும் உலகக் கோப்பை புரோமோ வீடியோ!
ஒடிசாவைச் சேர்ந்த விராட் கோலியின் ரசிகர் ஒருவர் உடல் முழுவதும் கோலியின் கிரிக்கெட் நிகழ்வுகளை டாட்டூவாக போட்டுள்ளார்.
கிரிக்கெட்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலேயும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் என்றால் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கிரிக்கெட் வீரர்களின் புகைப்படத்தை டாட்டூவாக போடுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் விராட் கோலியின் தீவிர ரசிகராக இருக்கிறார். அவர் யார் என்றால், அவர் தான் குஜராத்தைச் சேர்ந்தவர் பிந்து பெஹரா.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்ஷித் ராணா அண்ட் சௌம்யா சர்கார்; வைரலாகும் வீடியோ!
விராட் கோலியின் தீவிர ரசிகரான பெஹரா, அவரது ஜெர்சி நம்பர் 18 முதல் ஒவ்வொரு நிகழ்வையும் தனது உடல் முழுவதிலும் டாட்டூவாக போட்டுள்ளார். இவ்வளவு ஏன், இவரது டாட்டூ தொடர்பான வீடியோ ஒன்று, ஐசிசி வெளியிட்ட ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான புரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
ஆட்டம் காட்டி ஏமாத்திய சுப்மன் கில், ரஹானே: ரசிகர்கள் விமர்சனம்!
அந்த புரோமோ வீடியோ ஷாருக்கானின் பின்னணி குரலில் வெளிவந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்தின. இந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.