வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்ஷித் ராணா அண்ட் சௌம்யா சர்கார்; வைரலாகும் வீடியோ!
வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் சௌம்யா சர்கார் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தியா ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன் ஏ, இலங்கை ஏ, நேபாள், ஐக்கிய அரபு நாடுகள் ஏ ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின.
ஆட்டம் காட்டி ஏமாத்திய சுப்மன் கில், ரஹானே: ரசிகர்கள் விமர்சனம்!
இதில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதன்படி, நேற்று நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் ஏ அணிகள் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் யாஷ் துல் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியா ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து வங்கதேச ஏ அணி விளையாடியது. இதில், தன்ஷித் ஹாசன் 51 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் முகமது நைம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஒரு கட்டத்தில் வங்கதேச வீரர் சௌம்யா சர்கார் 5 ரன்கள் எடுத்திருந்த போது யுவராஜ்சிங் தோடியா பந்து வீசினார். அவரது 25.2 ஆவது ஓவரில், சௌம்யா அடித்த பந்தை நிகின் ஜோஸ் டைவ் அடித்து கேட்ச் பிடிக்கவே ஆன்பீல்டு அம்பயரும் அவுட் கொடுத்தார். அதற்கு சௌம்யா சர்கார் இதெல்லாம் அவுட்டா என்பது போன்று அங்கேயே இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஹர்ஷித் ராணா, சௌம்யா சர்கார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சௌம்யா சர்கார் 5 ரன்களில் வெளியேறவே, மற்ற வீரர்களும் வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக வங்கதேச அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த வெற்றியின் மூலமாக இந்தியா ஏ அணி நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொழும்புவில் உள்ள அர் பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது.